கடலை பருப்பு ஃப்ரை,kadalai paruppu fry samayal cooking tips in tamil

தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு – 200 கிராம்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

கடலைப்பருப்பை நன்றாக கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலையை போட்டு பொரித்தெடுக்கவும்.

அடுத்து நன்றாக உலர்ந்த கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.

பொரித்த கடலைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

சன்னா தால் ஃப்ரை ரெடி.

ஒரு வாரம் வரை இதை சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors