கடலை பருப்பு சுண்டல்,kadalai paruppu sundal ,sundal samayal kurippugal

தேவையான பொருட்கள் 

கடலை பருப்பு  – 1 கப்

பச்சை மிளகாய் – 4

துருவிய தேங்காய் – 1/2 கப்

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க 

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 3/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 2 சிட்டிகை

கருவேப்பிலை – ஒரு கொத்து

கடலை பருப்பு சுண்டல் செய்முறை 

  1. கடலை பருப்பை  ஓரு மணி முதல் 3 மணி நேரம் வரை நேரம்  ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவிடவும். எளிதில் பொங்கி வழியக்கூடும், அதனால் கொதி வரும்பொழுது கலக்கி விடவும். ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்தல் மிருதுவாக வேவதுடன், பொங்கியும் ஊற்றாது.
  2. பருப்பு நன்கு உள்வரை வேக விடவும். குழுயாமல் பார்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். வேகவைத்த கடலை பருப்பை, தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
  4. ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

குறிப்பு

  • கடலை பருப்பைஊறவைப்பதன் மூலம், ஈரத்தன்மயுடனும், மிருதுவாகவும் இருக்கும். எளிதில் வெந்தும் விடும்.
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors