கடலை பருப்பு தக்காளி கூட்டு,kadalai paruppu thakkali kootu,tamil recipe in tamil

தேவையான பொருட்கள்:-
கடலை பருப்பு —————- 1 கப்
வெங்காயம் ——————- 1
தக்காளி பழம் —————– 2
பச்சை மிளகாய் ————– 4
மஞ்சள் தூள் —————– 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் —————- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் ———- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:-
எண்ணெய் ————— 2 டேபிள் ஸ்பூன்
சோம்புத்தூள் ———– 1/2 டீஸ்பூன்
பூண்டு பற்கள் ———-5
கறிவேப்பில்லை சிறிதளவு.

 

செய்முறை:-
வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
கடலை பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் , நசுக்கிய பூண்டு, கறி வேப்பில்லை போட்டு தாளித்து வேகவைத்த பருப்புடன் சேர்த்து,தேங்காய் துருவலை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சற்றி அதனையும் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.
ருசியான இந்த கடலை பருப்பு, தக்காளி கூட்டை கார குழம்பு மற்று ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சூடான சாதத்தில் கூட்டை போட்டு விருப்பப்பட்டால் சிறிதளவு நெய் விட்டு கலந்து கார சாரமான தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
குறிப்பு:- பருப்பு வேகவைக்கும் போது அதனுடன் நறுக்கிய முட்டைகோஸ் , பீர்க்கங்காய், புடலங்காய் சுரைக்காய் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து வேகவைத்து இதே முறையில் கூட்டு தயாரிக்கலாம்.
பச்சை மிளகாயின் காரம் , உப்பு இவற்றை அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors