கொண்டக்கடலை மசாலா,kondakadalai masala samayal kurippu

கொண்டக்கடலை (வெள்ளை) – 1 கப்

வெங்காயம் – 1 கப்

தக்காளி – 1 கப்

பச்சைமிளகாய் – 4

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

தனியா தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

புளிக்கரைசல் – 1 ஸ்பூன்

எண்ணெய் – 4 ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

கொத்துமல்லி தழை – சிறிதளவு

 

செய்முறை

கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். ஊறிய கடலை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி 3 நிமிடம் மூடாமல் 5 நிமிடமும் வைக்கவும். இடையில் இரண்டு மூன்று முறை கலந்து விடவும். தண்ணீரை வடித்து விட்டு உப்பு சேர்க்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கலந்து மைக்ரோ – ஹையில் 3 நிமிடம் வைக்கவும்.

தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மைக்ரோ – ஹையில் 2நிமிடம் வைடககவும். அதில் மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

அதனுடன் வேக வைத்த கடலையைச் சேர்த்து புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைக்ரோ – ஹையில் 5 நிமிடம் வைக்கவும். இடையில் கிளறவும். அதன் மேலாக கொத்தமல்லி தழையைப் போட்டு பரிமாறலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors