கொண்டக்கடலை பொரியல்,kondakadalai poriyal in tamil, Channa Poriyal

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை – 1 கோப்பை
வெங்காயம் – 1
தக்காளி – 2
சோம்பு – 1/2 தே.க
வரமிளகாய் – 2
மஞ்சள் தூள் – சிறிது
சாம்பார் பொடி – 1/2 அ 3/4 தே.க
உப்பு -ருசிக்கு

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் – 2 மே.க
கடுகு – 1/4 தே.க
உ.பருப்பு – 1/2 தே.க

 

கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறப் போடவும். மறு நாள் உப்பு சிறிது சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்,

தாளிக்கவும்.

வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

தக்காளி + வரமிளகாய் + சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதை ஊற்றி சிறிது வதக்கவும்.

கொண்டக்கடலையை சேர்க்கவும்.

பொடிகளைப் போட்டு நன்கு கிளறி விட்டு சேர்மானமாக பொறியல் பதம் வரவும் இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors