கொண்டக்கடலை தீயல்,Kondakadalai Theeyal recipe Samayal in tamil

கொண்டக்கடலை -2 கப்
வெங்காயம் – 10
புளி கரைசல் – சிறிது
வெங்காய வடகம் – 5
சுண்டக்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தவரங்காய் – 15
நல்லெண்ணெய் – ¼ கப்
உப்பு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 7
மல்லி தூள் – 3 டேபிள் ஸ்பூன்

முதலில் கொண்டக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து பின் அவற்றை குக்கரில் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து, மிக்ஸி ஜாரில் போட்டு மசித்து வைக்கவும்.

இப்போது எண்ணெய்யில் வெங்காய வடகம், சுண்டக்காய், கொத்தவரங்காய், வெங்காயம் சேர்த்து வறுக்கவும். சமைத்த வைத்துள்ள கொண்டக்கடலை மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பின் புளி கரைசல் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் கலந்து உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வறுத்து குழம்பில் ஊற்றி பரிமாறவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors