எடையை குறைக்கும் பூண்டு – முருங்கைக்கீரை கஞ்சி,murungai keerai kanji in tamil

தேவையான பொருள்கள் :

பூண்டு – 15 பல்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன்
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு – தேவையான அளவு
மோர் – ஒரு கப்
தண்ணீர் – 4 கப்

 

எடையை குறைக்கும் பூண்டு - முருங்கைக்கீரை கஞ்சி,murungai keerai kanji in tamil

செய்முறை :

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

புழுங்கல் அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்து கொள்ளவும்.

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும்.

ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம்.

அருமையான பூண்டு – வெந்தயக்கீரை கஞ்சி ரெடி.

காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம்.

Loading...
Categories: Soup Recipe In Tamil, Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors