பாலக் கீரை பருப்பு கூட்டு,palak keerai paruppu kootu,Keerai samayal

பாலக்கீரை – 2 கைப்பிடி,
துவரம்பருப்பு – 1/4 கப்,
தேங்காய்ப்பூ – 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு பற்கள் – 4,
மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி – தலா 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கு

தாளிக்க :

காய்ந்த மிளகாய் – 2
கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1/4 டீஸ்பூன்.

 

செய்முறை :

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சீரகப்பொடி, தேங்காய்ப்பூவை நைசாக அரைத்து கொள்ளவும்.

துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

பாலக்கீரையை நறுக்கி நீர் சேர்த்து மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கி மத்தினால் மசிக்கவும். அல்லது மிக்சியில் சுற்றவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரை, அரைத்த தேங்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான பாலக் கீரைக் கூட்டு ரெடி.

இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும் மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors