பொன்னாங்கன்னி கீரை கூட்டு,ponnanganni keerai kootu recipe in tamil,ponnanganni samayal kurippugal

தேவையான பொருள்கள் –
பொன்னாங்கண்ணி கீரை – 2 கைப்பிடி அளவு
பாசிப்பருப்பு – 50 கிராம்
காயம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க –
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 6
மிளகாய் வத்தல் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு பற்கள் – 3
தாளிக்க –
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை –
கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும். பிறகு அதனுடன் கீரை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

கீரை வெந்த்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors