கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்,pregnancy food tips in tamil language

கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் உப்பின் அளவை மாற்றலாம். ரத்த கொதிப்பு இருக்கிறது என உப்பை ஒரேயடியாக குறைத்து விடவோ தவிர்க்கவோ கூடாது. அது மிகவும் ஆபத்தானது.
பொதுவாகவே மனிதர்களுக்கு உப்பு அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உப்பை தவிர்த்தால் அது பெண்களின் உடல் நலனையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். பெண்களுக்கு கைகால்கள் வீக்கம் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே கவனம் தேவை.
கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம். பின் எந்த காலத்திலும் அதை தொட வேண்டாம். ஏனென்றால் அவை பெண்களை மட்டுமல்ல குழந்தையின் உடல்நலனையும் கடுமையாக பாதிக்கும்.
வீட்டில் உள்ள வேறு யாருக்காவது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட கர்ப்பிணிகளுக்கு அது ஆபத்தாகும். எனவே வீட்டில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டாம்.
தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது நலம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென்று சில உணவுகள் மீது ஆர்வமும் வெறுப்பும் ஏற்படும். அப்போது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், ரத்தகொதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அச்சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் சுயமாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது.
Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors