புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு,pudalangai kootu recipe in tamil language,Saiva samyal

புடலங்காய் – 2 கப்
கடலைப்பருப்பு – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வெங்காயம் – ஒன்று
காய்ந்த மிளகாய் -2
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப

 

புடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே சுத்தம் செய்து நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து தட்டி வைக்கவும். கடலைப்பருப்பை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (சுண்டல் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்). வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதில் புடலங்காயை போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் முக்கால் பதம் வெந்த கடலைப்பருப்பையும் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான புடலை கடலைப்பருப்பு கூட்டு தயார்.

கூட்டு தளர வேண்டுமெனில் கடைசியாக தேங்காயை அரைத்து விழுதாக சேர்த்து கிளறி சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors