தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்,thoppai kuraiya mooligai maruthuvam

ஜின்ஸெங் ஜின்ஸெங் மூலிகையில் உள்ள காஃபைன் என்ற பொருள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்கிறது. மேலும் அந்த நாளுக்கு தேவையான ஆற்றலையும் அது தருகிறது. எனவே தினமும் ஜின்ஸெங் டீ அருந்தினால் தொப்பையை விரைவாக குறைத்து விடலாம். செம்பருத்தி டீ செம்பருத்தி தேநீர் உங்களுக்கு கொழுப்பை கரைக்க உதவுகிறது. செம்பருத்தி பூவில் உள்ள நீர்ச்சத்து வயிறு வீக்கத்தையும் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் குறைக்கிறது. எனவே இந்த செம்பருத்தி பூவை காய வைத்து அதை கொண்டு தேநீர் தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். பின் பக்க இடுப்புத் தசையை குறைக்க எளிய வழிமுறைகள்!

க்ரீன் டீ க்ரீன் டீ உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து விரைவாக கொழுப்பை கரைக்கிறது. மேலும் டயாபெட்டீஸ் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. புதினா புதினா அதன் இனிப்பு வாசனையால் நிறைய

தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்,thoppai kuraiya mooligai maruthuvam

உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இவை நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்க முடியும். ரோஸ்மேரி ரோஸ்மேரி மூலிகையில் உள்ள லிப்பாஸ் என்ற என்ஜைம் கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்து எளிதாக உடலில் கொழுப்பு தங்காமல் காக்கிறது. இதை சாப்பிட்டால் போதும் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உங்கள் சீரண சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. கற்றாழை கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. உடல் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. அழகு பராமரிப்பு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதிலும் கற்றாழை ஜெல் உதவுகிறது. எனவே தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் கொழுப்பு சத்து காணாமல் போகும். பார்சிலி இது ஒரு அலங்கரிக்கும் தாவரமாக இருந்தாலும் இவை பசியை கட்டுப்படுத்துகிறது. மேலும் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பை ஆற்றலாக மாற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. டான்டெலியன் உடல் எடையை குறைக்க இதை நாம் தேநீராகவோ அல்லது சாலட்டாகவோ எடுத்து கொள்ளலாம்.

நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் அழற்சியை போக்குகிறது. இது உடல் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விஷ்னு க்ரந்தி விஷ்னு க்ரந்தி நமது கல்லீரல் செயலை மேம்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. மேலும் தங்கியுள்ள கொழுப்பை குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. துளசி துளிசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. அதிகமான கார்டிசோல் அளவு கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேரச் செய்கிறது. எனவே இந்த துளிசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors