தூதுவளை மசாலா தோசை,thuthuvalai masala dosa cooking tips in tamil

தோசை மாவு – 100 முதல் 125 மி.லி.,
நல்லெண்ணெய் (தோசைக்கு) – 1/2 டீஸ்பூன்,
தூதுவளை இலைகள் – 15 முதல் 20,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 25 கிராம்,
நறுக்கிய வெங்காயம் –  20 கிராம்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 2 கிராம்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
கடலைப் பருப்பு – 2 கிராம்,
மிளகுத் தூள் – 2 கிராம்,
கொத்தமல்லி இலை – சிறிதளவு,
நெய் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

 


தூதுவளை இலைகளை தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவும். கடாயில் நெய்யை ஊற்றி அதில் தூதுவளை இலைகளை வதக்கவும். வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அத்துடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கை போடவும். நன்கு கிளறி, அத்துடன் மிளகுத் தூள் சேர்த்து, பிறகு அதில் வதக்கிய தூதுவளை இலைகளைச் சேர்க்கவும். இதன் மேல் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். தோசை வார்த்து  அத்துடன் தூதுவளை மசாலாவை வைத்து, சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Dosai recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors