தூதுவளை ரசம்,thuthuvalai rasam samayal kurippu,rasam cooking tips list

தேவையானப்பொருட்கள்:
தூதுவளை-1 கப்
தக்காளி-1
பூண்டு- 4 பல்
புளி- நெல்லிக்காய் அளவு
உப்பு-தே.அளவு
துவரம் பருப்பு-கால் கப்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
ரசப் பொடி-1 டே.ஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
பெருங்காயம்-2
கறிவேப்பிலை-1
கொத்து கிள்ளிய வர மிளகாய்-2
கொத்தமல்லித் தழை

 

செய்முறை:•

முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும்.

• தூதுவளை இலைகளை கவனமாக முள் குத்தாமல் பார்த்து ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து நீரில் அலசி,தண்ணீரை வடித்து வைக்கவும்.

• பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சுத்தம் செய்த தூதுவளை இலைகளை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.

• புளியை கரைத்து எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து, அதனுடன் ரசப் பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். இந்த முறையில் செய்தால் ரசம் மிக வாசமாக இருக்கும்), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.

• தேவையான உப்பு சேர்க்கவும்.

• அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து மீதமுள்ள எண்ணெயை விட்டு கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,வர மிளகாய் தாளித்து,வதக்கிய தூதுவளை இலைகளை சேர்த்து,கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றவும். பூண்டை தட்டி போடவும்.(அல்லது ரசப் பொடியுடனும் சேர்க்கலாம்)

• ரசம் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors