உளுந்து கஞ்சி,ulundhu kanji samayal seivathu eppadi

கருப்பு உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல்  – 4 ஸ்பூன்
தூள் செய்யப்பட்ட கருப்பட்டி – அரை கப்
சுக்கு தூள் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 5 கப்

 

செய்முறை :

* உளுந்தை வாணலியில் இட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும்.

* இந்த மாவில் 1 கப் நீர், சிறிது உப்பு கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரையுங்கள்.

* அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறுங்கள். மாவு வெந்து வரும்போது பொடித்து வைத்துள்ள கருப்பட்டி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு காய்ச்சவும்.

* இந்த கஞ்சி காய்ச்சும் போது பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்திருக்க வேண்டும்.

* கஞ்சி இறுகும் போது அந்த கொதி நீரை ஊற்றி கிழுகிழுப்பாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

* இது ஊட்டச்சத்து நிறைந்தது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையிலோ, மாலையிலோ வழங்குங்கள். தசைகள் பலம் பெறும். மெலிந்த குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கஞ்சயை தயார் செய்து கொடுங்கள். வயதானவர்கள் மாலை நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலை போக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors