சிக்கன் டிக்கா,chicken tikka recipe in tamil

சிக்கன் – 200 கிராம்,
கெட்டித்தயிர் – 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது, உப்பு – தலா 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், லெமன் ஜூஸ் – தலா 1/4 டீஸ்பூன்,
கஸ்தூரிமேத்தி, கார்ன்ஃப்ளார், எண்ணெய் – தலா 1 டீஸ்பூன்,
வெங்காயம், குடைமிளகாய் – தலா 1/2 துண்டு.

டிக்கா செய்ய…

வுடன் ஸ்க்யூவர் – 3,
கரித்துண்டு – 1,
நெய் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 5 டீஸ்பூன்.

வெங்காயம், குடைமிளகாய், சிக்கனை ஒரே சைஸ் துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் மேரினேட் செய்ய கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து
5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். வுடன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு சிக்கன், குடைமிளகாய், வெங்காயத்தை எடுத்து வுடன் ஸ்க்யூவரில் சொருகி, சூடான தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு அதன் நடுவில் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை போட்டு அதில் நெய் விட்டு மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை திருப்பி விடவும். டொமேட்டோ கெட்சப் அல்லது மையோனைஸுடன் பரிமாறவும்.
Tags:

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors