மலாய் ரோல்,malaysian tamil rolls

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 300 கிராம்,
மைதா – 30 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் – 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக சீவிய பாதாம்,
பிஸ்தா – தலா 5,
கன்டென்ஸ்டு மில்க் – 100 கிராம்.

OLYMPUS DIGITAL CAMERA

250 மி.லி. பாலில் ஃப்ரெஷ் கிரீம், கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்து, பாதி அளவிற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி நன்கு ஆறவிடவும். மீதியுள்ள பாலைச் சூடாக்கி, வினிகர் சேர்த்து பாலைத் திரிய வைத்து மஸ்லின் துணியில் வடிகட்டி, தண்ணீரில் அலசிக் கொள்ளவும். சர்க்கரைக்குச் சம அளவுத் தண்ணீர் ஊற்றி சர்க்கரைப்பாகு காய்ச்சி கொள்ளவும்.

பாத்திரத்தில் பனீர், மைதாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக நீளமாக உருட்டிக் கொள்ளவும். இதனை சர்க்கரைப்பாகில் போட்டு மிதமானச் சூட்டில் சூடு செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும். தயாரான உருண்டைகளை பால் கலவையில் கலந்து ஊறவைத்து பாதாம், பிஸ்தாவால் அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors