பொட்டேடோ வெட்ஜஸ் ,potato veggies cooking tips in tamil

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 4,
ஆலிவ் எண்ணெய் – 3 டீஸ்பூன்,
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
ஆனியன் பவுடர் – 1 டீஸ்பூன்,
கார்லிக் பவுடர், உப்பு, மிளகுத்தூள், ரெட் சில்லி ப்ளேக்ஸ், சில்லி பவுடர் – தலா 1/2 டீஸ்பூன்,
மைதா – 4 டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப் – 2 டீஸ்பூன்,
மையோனைஸ் – 4 டீஸ்பூன்.

உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் ஒவ்வொரு கிழங்கையும் 6 துண்டுகளாக நீளமாக அரிந்து கொள்ளவும். பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து கிழங்குடன் நன்றாக பிரட்டிக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கிழங்குகளை பரவ போட்டு இருபுறமும் மொறு மொறுப்பாக வரும்வரை மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் டொமேட்டோ கெட்சப், மையோனைஸை ஒன்றாக கலந்து சூடான வெட்ஜசுடன் பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors