தினை சேமியா அல்வா,thinai semiya recipe in tamil

தினை சேமியா – 200 கிராம்,
சர்க்கரை – தேவைக்கு,
கேசரி பவுடர் – 1 சிட்டிகை,
நெய் – 100 கிராம்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை – தலா 10,
பால்கோவா – 50 கிராம்,
பால் – 100 மி.லி.

பாத்திரத்தில் பால், சுடுநீர், சர்க்கரை கலந்து, இதில் தினை சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கலவை மற்றும் கேசரி பவுடர், பால்கோவா சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors