வெஜ் சில்லி மோமோஸ் ,veg chilli somas, samayal kurippu in tamil

மாவிற்கு…

மைதா – 1/2 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு,
எண்ணெய் – சிறிது.

பூரணத்திற்கு…

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 3/4 கப்,
வெங்காயம் – 1/2 கப்,
இஞ்சி – 2 துண்டு,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

மோமோஸ் சட்னி செய்ய…

காய்ந்தமிளகாய் – 5,
காஷ்மீரி சிகப்பு மிளகாய் – 7,
தண்ணீர் – 1/2 கப்,
வெங்காயம் – பாதி,
தக்காளி – 1,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – சிறு துண்டு.

சாஸ் செய்ய…

மோமோஸ் சட்னி – 4 டீஸ்பூன்,
ரெட் சில்லி பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
வினிகர், சோயா சாஸ் – தலா 1/4 டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப் – 5 டீஸ்பூன்.

மாவிற்கு கொடுத்த பொருட் களை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே எண்ணெய் தடவி 15 நிமிடம் மூடி வைக்கவும். கோஸ், வெங்காயத்தில் இருந்து தண்ணீரை பிழிந்து எடுத்து இஞ்சி, உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். சட்னி செய்ய கொடுத்தப் பொருட்களை தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். சப்பாத்தி செய்து நடுவில் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து ஆறியதும் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சாஸிற்கு கொடுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 6, பூண்டு பல் 5, பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கி சாஸ் ஊற்றவும். காரம் அதிகமாக இருந்தால் 1/4 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு மோமோஸ்களை போட்டு கொதிக்க விடவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வந்ததும் கொத்தமல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors