இல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்

நம்மைச் சுற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவர்களாக, நம்மைச் சுற்றி எதிர்மறை எண்ணங்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தச் சூழலிலிருந்து விடுபட,  நமக்கு சில  தாவரங்கள் உதவுகின்றன.

பலவிதமான வீட்டு அலங்காரச் செடிவகைகள், நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணங்கள் பரவுவதற்கும், நாம்  நலமுடன் இருப்பதற்கும் உதவுகின்றன.  சுற்றுச் சூழல்,  நேர்மறையாக இல்லாத போது, நாம் புத்துணர்வோடு ஒரு நாளைத் துவங்க முடியாது.

வீட்டில் இன்பம் களைகட்டுவதற்கு ஏற்ற சில தாவர வகைகளை இங்கு காண்போம்….

1.அமைதி தரும் அல்லி

கரும் பச்சை இலைகளும், வெள்ளை மலர்களும் கொண்ட இந்த அல்லிச் செடி, உட்புற காற்றைச் சுத்தப்படுத்தி, மாசற்ற சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க வகைசெய்கிறது.  சலிப்பான நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் அற்புதமான உட்புற அலங்காரச் செடிவகை இது.

 

2.இந்தியத் துளசி

இந்தியப் பண்பாட்டில் புனிதமானக் கருதப்படும் இந்தத் துளசியானது, காற்றைச் சுத்தப்படுத்தி, வீட்டிற்குள் ஒரு தெய்வீகச் சூழல் நிலவச் செய்து,  நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. வீட்டில் இதனை வளர்ப்பதால், தெய்வீக குணமளிக்கும் சக்தி கிடைக்கும்.

 

3.பாக்கு பனை

இதன் இலைகள் சுகமாக அசைந்து, வீட்டிற்குள் ஒரு இதமான சக்தி நிலவச் செய்கிறது. இதை வளர்ப்பது மிகச் சுலபம்.  வீட்டின் உட்புறம் இதை வளர்க்க செயற்கை ஒளியும், நீருமே போதுமானது.

 

4.குங்கிலியச் செடி

உள் அலங்காரச் செடி வகைகளில் முக்கியமான இச்செடி, தமக்கு ஊற்றப்படும் நீரில் மூன்று சதவிகிதத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு, காற்றின் ஈரப்பதத்தை  அதிகப்படுத்துகிறது. அறைகளின் ஆக்ஸிஜன் அளவைக் கூட்டி, நமது புத்துணர்வும், நம்பிக்கையும் அதிகமாவதற்கு உதவுகிறது.

5.தண்ணீர்விட்டாங்கிழங்கு (Spider Plant)

இச்செடி காற்றைச் சுத்தப்படுத்துவதில் பெருப்பங்கு வகிக்கிறது. காற்றில் கலந்துள்ள, ஃபார்மால்டிஹைட் என்னும் நச்சு வேதிப்பொருளை இது தொண்ணூறு விழுக்காடு வரை நீக்குவதாக, அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வீடுகளில், சமையலறைகளிலும், குளியலறைகளிலும், அலங்கரிக்க இச்செடி உபயோகப்படுத்தப்படுகிறது

6.வெள்ளால் அத்தி (weeping fig)

வீட்டு வரவேற்பறைகளில் வளர்க்கப்படும் இச்செடி, காற்றிலுள்ள நச்சு வேதிப் பொருட்களான ஃபார்மால்டிஹைட், பென்ஸீன், ட்ரைக்ளோரோஎத்திலீன் போன்றவற்றை வடிகட்டி, நமக்குச் சுத்தமான காற்றைச் சுவாசிக்கத் தருகிறது. இதனை நேரடி சூரிய ஒளி படும்படியாக வைத்தால், நன்கு வளரும்

7.மணி ப்ளாண்ட் (Money plant)

தங்கக் கோயில், வெள்ளி திராச்சை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இச்செடி, “ஃபென்சூய்” எனும் சீன வாஸ்து முறைப்படி, நேர்மறையான சூழ் நிலைகளை உருவாக்கி,, நல்ல எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது.  கொடிபோல் படரும் இச்செடியினை வீட்டின் மூலைகளில் வளர்ப்பதால், எதிர்மறை எண்ணங்கள் அகன்று, மன அழுத்தம் குறைவதற்கு வழிசெய்கிறது.

 

8.அதிர்ஷ்ட மூங்கில்

ஆயிரமாண்டுகளுக்கு மேலாக, ஆசியக்கண்டத்தில் பரவலாக, நல்ல எதிர்காலத்தின் அடையாளமாக வளர்க்கப்படும் இச்செடி பொதுவாக, வீட்டு உள் அலங்காரத்திற்காகவே பயன் படுகிறது.  “ஃபென்சூய்” முறைப்படி, இச்செடி, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல எதிர்காலம் அமைய வளர்க்கப்படுகிறது.

9.கற்றாழை  (Aloe vera)

இது நேர்மறை எண்ணங்களையும், அதிர்ஷ்டத்தையும் உருவாக்குகிறது.இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு. இது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உட்கொண்டு, ஆக்ஸிஜனை இரவிலும் கூட வெளிப்படுத்துகிறது.  நல்ல மாசற்ற காற்றை அளித்து நமக்கு சுகமான தூக்கத்தை அளிக்கிறது.

 

10.ஜாதி பத்திரி (Sage)

மருத்துவ குணங்கள் கொண்ட இச்செடி, அதிசயத்தக்க வகையில் காற்றைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதாகவும், வீட்டில் ஆக்கபூர்வமான ஆற்றல்களை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது.

 

பட மூல: davenportgarden, dailyhunt, bakker, rover, getblooming, nurserylive, dir.indiamart, youtube

Loading...
Categories: தமிழ்

Leave a Reply


Sponsors