உங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்

எடை குறைப்பு என்பது மிகவும் கஷ்டமான செயலாகும். இப்பொழுதெல்லாம் எங்கு, எதை சாப்பிட்டாலும் அதனால் ஆரோக்யத்திற்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அச்சம் கொள்கிறோம். சில பழங்களை உண்பதன் மூலம் நம் எடை அதிகரிக்கும் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. ஆம் சில பழங்களை உண்ணும்பொழுது அதன் மூலம்  நம் எடை அதிகரிக்கிறது.

நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பழங்கள் எவை என்பதை காண்போம்:

 

1.வாழைப்பழம்

உடல் எடையை அதிகரிக்க / குறைக்க இரண்டிற்கும் வாழைப்பழம் உதவுகிறது. அது நாம் எந்த நேரத்தில் அதை உண்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. எடையை குறைக்க வேண்டுமென்றால் வாழப்பழத்தை காலை உணவாகவோ அல்லது மத்திய உணவாகவோ எடுத்த்துக் கொள்ளலாம். அன்று முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலை அது நமக்கு அளிக்கிறது. ஆனால் தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை உட்கொண்டால் அது எடையை அதிகரிக்கச் செய்யும்.

 

2.அவகாடோ

அவகாடோவில் மிக அதிகமான கலோரிகள் இருப்பதால் அது எடையை அதிகரிக்கச் செய்கிறது. 250 கிராம் அவகாடோ 400 கலோரிகளை கொண்டிருக்கிறது.

 

3.பேரிச்சம்பழம்

எடையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இருப்பவராயின், பேரிச்சம்பழத்திலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும். 4-5 பேரிச்சம்பழங்களில் 114 கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

 

4.உலர்ந்த திராட்சை

உலர் திராட்சையில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிக அளவில் இருப்பதால் எடையை அதிகரிக்கச் செய்வதை துரிதப் படுத்துகிறது. தினசரி வேலை செய்வதற்கான ஆற்றலை நமக்கு அளிப்பதோடு , எடையையும் அதிகரிக்கச் செய்கிறது.

 

5.திராட்சை பழங்கள்

பெரும்பாலோனரின் விருப்பத்திற்கு உகந்தது திராட்சை பழம். ஆனால் அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

 

6.தேங்காய்

தேங்காயில் உள்ள புரதம் எடையை அதிகரிக்கும். மேலும் அதில் குறிப்பிடத்தக்க அளவு கொழுப்பும் இருப்பதால், எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தேங்காயிலிருந்து விலகி இருப்பது நல்லது.

 

7.மாம்பழம்

பழங்களின் அரசன் எனப்படும் மாம்பழத்தில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. கோடைக்காலத்தின் மிக பிரபலமான இந்த பழத்திற்காக, வருடம் முழுவதும் கோடை காலத்தை  எதிர்பார்த்து நாம் காத்திருப்பது வழக்கம். ஆனால் நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் மாம்பழத்தை உங்கள் உணவிலிருந்து விலக்க வேண்டும்.

 

எடையை குறைக்க உண்ணக்கூடிய பழங்கள்:

1.ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் செழித்து இருப்பதால், எடையை குறைக்க உதவுகின்றது. மேலும் பல வைட்டமின்கள், நார்ச்சத்துக்களின் ஆதாரமாகவும் ஆப்பிள் விளங்குகின்றது.

 

2.தர்பூசணி

எடையை குறைப்பதில் தர்பூசணி பெரும் வியத்தகு செயலை ஆற்றுகிறது. அதை உண்ணும் பொழுது சீக்கிரமாக வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது. அதன் மூலம் நம் பசியார்வத்தை கட்டுப்படுத்தி விரைவில் பசி ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இது மிக குறைந்த கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு உடைய ஒரு குறைந்த கலோரி பழமாகும்.

 

3.ஆரஞ்சு

நம் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எளிதில் எரிக்கக் கூடிய வைட்டமின் C அதிக அளவில் உள்ள பழம் ஆரஞ்சு.

 

4.பேரிக்காய்

நம் பசியார்வத்தை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் பேரிக்காய் மிகவும் உதவுகிறது. சூப்பர் உணவு எனப்படும் அதிக நார்ச்சத்து உடைய பேரிக்காய் நம் உடலுக்கு தேவையான  வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்களை எளிதில் ஆட்கொள்ள வழிவகுக்கிறது.

 

Loading...
Categories: தொப்பை குறைய

Leave a Reply


Sponsors