உங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்

நமது இந்தியாவில், குழந்தைகள் போதிய அளவு உடல் வலிமை அற்றவர்களாக இருப்பதே, பெற்றோர்களின் மிக முக்கிய ஆதங்கமாக உள்ளது.  குழந்தைகள் அவர்கள் விரும்புவதை உண்பதால், உடலுக்கு நலன்பயக்கும் உணவுகளை உண்ணச்செய்வது, பொற்றோர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனேக பெற்றோர்கள், குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்கும் கேள்வி, குழந்தைகள் உடல் வலிமைபெற உதவும் உணவு வகைகளைப் பற்றியதாகவே இருக்கிறது.

உங்கள் குழந்தைக்கு, சராசரி உடல் எடையைவிட குறைந்த எடை உள்ளதாக எண்ணுகிறீர்களா?

உங்கள் குழந்தைகள் உடல் மெலிந்து, மிக ஒல்லியாக இருப்பதற்காக வருந்துகிறீர்களா?

இதோ, குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வகை உணவுகள்:

1.நெய்:

நெய் அல்லது காய்ச்சிய வெண்ணெய் உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்தை வழங்கும் பாரம்பரியமான, நம்பகமான உணவாகும்.  குழந்தைகள் பிறந்த எட்டாம் மாதத்திலிருந்து நெய் கொடுக்கத் தொடங்கலாம். எளிதில் சீரணமாகும் நெய் உணவுக்கும் சுவை கூட்டும்

 

2.சர்க்கரை உருளை (SWEET POTATO)

சர்க்கரை உருளை குழந்தைகளின் உடல் எடை உடனடியாக சிறிது அதிகரிக்க உதவும்.  இதைவிட என்ன வேண்டும்? சர்க்கரை உருளையை பயன்படுத்தி, ஃப்ரென்ச் ஃப்ரை, பொட்டேடோ சாட் மற்றும்  பணியாரங்கள் என விதவிதமாக செய்யலாம்

 

3.உலர் பழங்கள்:

கை  நிறைய உலர் பழங்களை உண்பது உடல் எடை கூட உதவும் உன்னத வழியாம்.  குழந்தைகளின் பத்தாவது மாதம் முதல் இதனை உண்ணக் கொடுங்கள். வேறுபாட்டை நீங்களே உணர்வீர்கள்.

 

4.கேழ்வரகு:

கேழ்வரகு குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் மிகச் சிறந்த உணவாகும்.  எளிதில் சீரணமாகும் கேழ்வரகில், தோசை, இட்லி, லட்டு, பணியாரம் மற்றும் கூழ் போன்றவற்றை செய்து உண்ணலாம்.

 

5.வெண்ணெய் பழம் (AVOCADO):

சுவையான, சத்து நிறைந்த வெண்ணெய் பழங்கள், குழந்தைகளின் உடல் எடை கூட உதவும்.  வெண்ணெய் பழச் சாற்றை கலந்து செய்த ஐஸ் கிரீம் மற்றும் ஜூஸ்களை, குழந்தைகளின் ஆறாம் மாதம் முதல் கொடுக்க ஆரம்பித்து, குழந்தைகள் வாயில் எச்சில் ஊற, அவற்றைச் சாப்பிடுவதைக் கண்டுகளியுங்கள்.

 

6.முட்டை:

முட்டை சாப்பிடும் பழக்கமுள்ள சைவர்கள் கூட இதனை தனியாக சமைத்தோ, சாதத்துடன் கலந்தோ,  குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திலிருந்து, கொடுத்துப் பழகலாம்

 

7.இறைச்சி மற்றும் கோழிகள்:

அசைவ உணவாளர்கள், இதனை குழந்தைகளின் எட்டாம் மாதத்திலிருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.  ‘சூப்’பாகவோ, கடைந்தோ இதனை சப்பாத்தியுடன் சேர்த்து உண்ணக் கொடுக்கலாம்

 

8.பட்டாணி:

பச்சைப் பட்டாணி மிகச் சிறந்த சத்துணவாகும்.  இதனை “ சூப்” செய்தோ, காய்கறி மற்றும் சாதத்துடன் கலந்தோ கொடுக்கலாம்

 

9.வாழைப்பழம்:

உடல் வலிமை பெற வாழைப்பழங்கள் சுவையான வழியாகும். பால் கலந்த பழச்சாறாகவோ, தோசை, அல்வா, கூழ் மற்றும் பணியாரங்களாகவோ, வாழைப்பழத்தினை கலந்து செய்து கொடுக்கலாம்

 

10.பேரீச்சம்பழம் (DATES) :

வருடம் முழுவதும் கிடைக்கும் பேரீச்சம் பழங்கள், உடல் வலிமைக்கு பெருமளவு உதவும்.  சர்க்கரைக்கு பதிலாக இதனைச் சேர்த்து பணியார வகைகள் செய்து கொடுக்கலாம்

 

11.புல்லரிசி அல்லது காடைக்கண்ணி (OATS) :

உடல் வலிமைக்கு மட்டுமல்லாது வயிற்றுப் போக்கைத் தவிர்க்கவும், குடல் நலத்தைப் பேணவும், புல்லரிசி எனப்படும் ஓட்ஸ் உதவுகிறது.  சிறந்த காலை உணவாக கருதப்படும் இதனை, குழந்தைகளுக்கு சாதமாகவோ, தோசை மற்றும் கூழாகவோ செய்து கொடுக்கலாம்.

 

மேற்கண்ட  உணவு வகைகள், உங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெறவும், அவர்களின் திடமான வளர்ச்சிக்கும் உதவும் என நம்புகிறோம்.!

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors