உங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா..? இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்

குழந்தை பிறந்து விட்டால் சந்தோஷம் இரட்டிப்பாவதைப் போல வேலையும் இரட்டிப்பாகி விடும். பிறந்த குழந்தையை சரிவர கவனிப்பது என்பதும் ஒரு கலை தான். இவ்வாறிருக்க, குழந்தைக்கு உண்ண எதைக் கொடுப்பது என்பதும் முக்கியமான காரணிகளுள் ஒன்றாகின்றது.

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்கள் வரை உணவு தொடர்பில் தாய்க்கு பெரிதாக சிரமம் இருக்காது. ஏனெனில், முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமே குழந்தைக்கு கொடுக்கப்படும்.

6 மாதங்களின் பின்னர் குழந்தையின் துடிப்பும் அதிகரிப்பதுடன் வேறு உணவுகளையும் சிறிய அளவில் உண்ணக் கொடுக்க வேண்டும் என்பதால் தாய் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் என்னென்ன உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?

01. மீன்
மீனில் குழந்தைகளுக்கு தேவைப்படும் விட்டமின்கள் அதிகளவு உள்ளன. இந்த மீனை நன்கு மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

02. இறைச்சி வகைகள்
சிறு குழந்தைகள் பொதுவாக இறைச்சி வகைகளை விரும்பி உண்பர். அந்த வகையில், இவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இறைச்சியை உண்ணக் கொடுக்கலாம். இறைச்சி வகைகளை நன்றாக வேக வைத்து கொடுக்க வேண்டும். இறைச்சியில் உள்ள பல்வேறு புரோட்டீன்கள் குழந்தைகளுக்கு நன்மையையே செய்யும்.

03. பழங்கள்
வாழைப்பழம், மாங்காய் மற்றும் பெயார்ஸ் என்பன குழந்தைகளுக்கு உகந்த விட்டமின்கள் நிறைந்த நல்ல பழங்களாகும். இவற்றில் விதைகள் இல்லாமை குழந்தைகளுக்கு உண்பதற்கும் இலகுவாக இருக்கும்.

04. பால்
முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப் பால் மட்டுமே குடித்து வளர்ந்த குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு வேறு உணவுகளையும் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆறு மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் பற்றாக்குறையாக இருக்கும். எனவே சுத்திகரிக்கப்பட்ட பாலை வழங்குவது சிறந்தது. பாலுடன் சிரியல்ஸையும் வழங்கலாம்.

05. பச்சைத் தாவரங்கள்
பசளை, கோவா, புரொக்கோலி, கோலிபிளவர் போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்குவது சிறந்தது. ஏனெனில், அவற்றில் பொதிந்துள்ள சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் குழந்தையை ஊக்கமாக இருக்க உதவி புரியும்.

06. முட்டை
தாய்ப் பால் மட்டுமே குடித்து வளர்ந்த குழந்தைக்கு முட்டையை உண்ணக் கொடுப்பது சிறந்தது. முதலில் முட்டையின் வெள்ளைக் கருவை மாத்திரம் வழங்க வேண்டும். அதிகளமாக வழங்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தை முட்டையை விரும்பி உண்ண ஆரம்பிக்கும் போது வழங்கப்படும் முட்டையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள். பின்னர் மெதுவாக சிறிதளவு மஞ்சள் கருவையும் வழங்கலாம்.

07. பழச்சாறு
நல்ல பழங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் பழச்சாறு செய்து ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு கொடுத்து வாருங்கள். ஒரு வேளை, குழந்தை பழச் சாறை பருக விரும்பாவிடில் குடிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக பழச் சாறை கலந்து அந்த தண்ணீரை பருக வைக்கவும். குழந்தைக்கு வழங்கும் தண்ணீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தண்ணீராக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

08. தக்காளி மற்றும் தக்காளிச் சாறு
குழந்தைகளுக்கு தக்காளி கொடுப்பது விட்டமின் குறைபாடுகளால் அவர்கள் பாதிக்கப்படுவதில் இருந்து அவர்களை காப்பாற்றுகின்றது. அத்துடன் தக்காளியை அவர்கள் சுவைத்து உண்பர்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors