கோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil

கோடைக் காலம் ஆரம்பித்து விட்டாலேயே எல்லோரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது, ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பது என ஆரம்பித்து விடுவார்கள்.

அதே போல் இந்தக் கோடைக் காலத்தில் உடற் பருமனை குறைத்துக் கொள்ளக் கூடிய உடற்பயிற்சி வகைகளையும் செய்து உடல் எடையை குறைத்துக் கொள்வது மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் மக்களின் வழக்கம்.

அந்த வகையில் உடல் எடையை குறைக்கக் கூடிய இலகுவான வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01.குளிர் காலங்களில் உடம்பை சூடாக வைத்திருக்கும் பொருட்டு நாம் சுப் செய்து பருகுவது வழக்கம். எனினும், கோடைக் காலத்தில் மரக்கறி சுப் மற்றும் கோழி சுப் செய்து உணவு சிறிதளவுடன் பருகுவதன் மூலம் வயிறு நிறைய உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

02. அதிகளவு மரக்கறிவகைகள், ஒலிவ் பழங்கள் மற்றும் கடலை வகைகளை உணவாக தொடர்ந்து ஒரு மாதத்திற்கு உட்கொண்டு வருவதன் மூலம், உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.

03. கோடைக் காலத்தில் பழச்சாறு பருகத் தோன்றும். ஆனால், பழத்தினை சாறாக மாற்றி பருகும் போது அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே அதற்கு பதிலாக பழத்தினை அப்படியே வெட்டி உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதே வேளை கோடைக் கால தாகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும்.


04. மதுசாரம் அருந்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மதுசாரமானது உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தி குறித்த செயற்பாட்டின் வேகத்தை குறைக்கின்றது. அதன் மூலம் உடல் எடை குறைவடைவது குறைக்கப்படுகின்றது. அத்துடன் மதுசாரத்தில் அதிகளவு கலோரிகள் உள்ளமை உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றது.

05. கோடைக் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் எமது உடலில் உள்ள சக்தி பெருமளவில் இழக்கப்படுகின்றது. இதனால் எமக்கு அடிக்கடி பசி ஏற்படுகின்றது. அதனால் அதிகளவு உணவு உட்கொள்ள நேரிடும். இது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு உட்கொண்ட பின்னர் தேவையான உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.

06. கோடைக் காலத்தில் காணப்படும் அதிகளவு வெப்பம் காரணமாக உடற்பயிற்சி செய்வது சற்று கடினமாகத் தோன்றும். எனினும், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விடக் கூடாது. வழமையாக செய்து வரும் உடற்பயிற்சி நிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் உடல் எடை அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.

07. கோடைக் காலங்களில் பச்சை மரக்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது சிறந்தது. ஏனெனில், அவற்றில் உள்ள அன்டிஒக்ஸிடன்ஸ் உடலின் வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிக்கின்றது. அதன் மூலம் உடல் எடை அதிகரிக்கப்படுவது தடுக்கப்படுகின்றது.- ©

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Loading...
Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors