புற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..!

சாக்லேட் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான் இனிப்பு வகை. இதில் பல வகையான சாக்லேட்கள் இருக்கின்றன. அதில் சிறப்பு வாய்ந்தது கறுப்பு சாக்லேட். கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால் மன அழுத்தம், வீக்கம் போன்றவற்றைக் குறைப்பதுடன், சிறந்த மனநிலையை உர்வாக்குகின்றது.

அது மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதற்கு காரணம் இதில் காணப்படும் அதிகளவான கோக்கோ. கோக்கோவில் உள்ள பிஃளேபனோயிட் தான் இதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக அமைகின்றது.

இந்த பிஃளேபனோயிட்டினால் ஹார்மோன்களின் சமநிலை பேணுவதுடன், இருதய தொகுதி, நரம்புத் தொகுதியின் ஆரோக்கியத்தை பேணமுடியும்.

கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் சில:

1. நோயை ஏற்படுத்தும் தீவிர காரணிகளில் இருந்து பாதுகாத்தல்:
கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால் நோய்களை ஏற்படுத்தும் காரணிகலிற்கு எதிராகச் செயற்பட்டு அதனை அழித்து உடலை நோயிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

2. புற்றுநோயில் இருந்து பாதுகாத்தல்:
இதில் காணப்படும் ப்ஃளேவனோயிட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதனால் இருதய நோய்கள் வராமல் பாதுகாக்க முடிகிறது.


4. மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
இது மனாழுத்தத்தையும் அழற்சியையும் குணப்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை பேண உதவுகிறது. குறிப்பாக வயதானவர்களின் மூளை செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

5. நீரிழிவு நோய்க்கு சிறந்தது.
கறுப்பு சாக்லேட்டை தினமும் சிறிதலவு உட்கொல்வதனால் இரத்த குளுக்கோஸ் அளவையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கச் செய்கிறது. மேலும் இதில் காணப்படும் இனிப்பு சுவை உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மையைத் தருகிறது.

கோகோ பவுடரில் உள்ள மருத்துவ நன்மைகள் சில:
1. குறைந்த கலோரியும் அதிகளவு நார்ப் பொருட்களும் காணப்படுகிறது.
ஒரு மேசைக்கரண்டி கறுப்பு சாக்லேட்டில் 10 கலோரிகள் மட்டுமே உள்ளது. அத்துடன் அதிகளவான நார்ப் பொருட்களும் உள்ளன.

2. கனியுப்புக்கள் செறிந்துள்ளது.
இதில் இரும்பு, சிங், மக்னீசியம், மங்கனீஸ் போன்ற பல கனியுப்புக்கள் காணப்படுவதனால் இரத்த ஓட்டத்தையும் நோய் எதிர்ப்பு சதியையும் அதிகரிக்கச் செய்யும்.

3. இயற்கையாக அழுத்ததிற்கு எதிராகச் செயற்படும்.
இதில் பினைல்அமைன் காணப்படுவதனால் மன அழுத்தத்தைக் குணப்படுத்தி உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

4. ப்ஃளேபனோயிட்.
கொக்கோவில் கட்டச்சின், எபிகட்டச்சின் எனும் ப்ளேபனோயிட் காணப்படுகிறது. இது இரத்த நரம்புகளை ஆறுதல் படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதனால் இரத்த அழுத்தம் குறைவடையும். .-

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors