மசாலா மீன் ப்ரை,tamil samayal tips

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு. மீன் – 5 துண்டுகள் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு. மல்லி – 1 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/4 டீஸ்பூன் பட்டை – 1/4 இன்ச் கிராம்பு – 1 சின்ன வெங்காயம் – 4-5 பூண்டு – 2 பற்கள்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors