கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி!,tamil samayal susiyam,susiyam recies

பாவளி நாளில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்விக்க, ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

வேகவைத்த கடலைப்பருப்பு – 100 கிராம், பாகு வெல்லம் – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், முந்திரித்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ

மேல்மாவுக்கு: மைதா மாவு – 75 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை.

செய்முறை:

வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

தீபாவளி ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி!

கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

தீபாவளி ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி!

மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி!

எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும். சூடான, சுவையான கடைலைபருப்பு சுய்யம் தயார்.

தீபாவளி ஸ்பெஷல் கடலைப்பருப்பு சுய்யம் ரெசிபி!
Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors