நண்டு பிரியாணி செய்வது எப்படி, nandu briyani,nandu briyani tamil,nandu receipes

 

தேவையான பொருட்கள்

நண்டு – 400 கிராம்

தக்காளி – 2
பாசுமதி அரிசி – 300 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் பால் – கால் கப்
தயிர் – 4 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
பட்டை – 2
ஏலக்காய் -5
அன்னாசிப்பூ – 2
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை – 1

நெய், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.
Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors