அரிசி மாவு கேக், arisi maavu cake seimurai in tamil, cake receipies in tamil

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
துருவிய வெல்லம் அல்லது சர்க்கரை – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
பால் – 1 கப்,
விருப்பமான ஃபுட் கலர்.


எப்படிச் செய்வது?

பச்சரியை 1 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் அரைத்து சலித்து லேசாக வறுத்து எடுத்துக்கொண்டால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

பதப்படுத்திய மாவை, பால், உப்பு தெளித்து கொஞ்சம் கொஞ்சமாக பிசறி இத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், விரும்பினால் கலர் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

இந்த கலவையைப் பிசறி பார்க்கும்போது பிரெட் தூள் மாதிரி இருக்கும்.

கையில் பிடித்தால் உதிரக்கூடாது. இந்த கலவையை கொஞ்சம், கொஞ்சமாக 2, 3 கிண்ணத்தில் நிரப்பி ஆவியில் வேகவிட்டு 10 நிமிடம் பின் எடுத்து படைக்கவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors