அவசர பிரியாணி, quike easy Biryani recipe in tamil , tamil samyala kurippu

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி சாதம் – 1 கப்,
கேரட், பீன்ஸ் – பச்சைப் பட்டாணி – 1/4 கிலோ,
வெங்காயம் – 1,
பிரியாணி மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் + நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பட்டை, கிராம்பு – சிறிது,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய்+நெய் சேர்த்து பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்னர் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து மூடி விடவும். எண்ணெயில் நன்கு வேக விடவும்.

பின்னர் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்.

வடித்த சாதம் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் எலுமிச்சைச்சாறு பிழிந்து கிளறி இறக்கி பரிமாறவும்.

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors