ஆட்டிறைச்சி கோலா உருண்டை, mutton cola urundai recipe in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள் 
ஆட்டிறைச்சி கொத்து கறி 500 கிராம் ( எலும்பில்லாதது)
சின்ன வெங்காயம் 18 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 8 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் 4 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
சோம்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பொட்டுக்கடலை 1 கப்
சாப்பாடு 1 கைப்பிடி ( மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும்)
நாட்டுக்கோழி முட்டை 4
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

செய்முறை

1. பொட்டுகடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக பொடித்து கொள்ள வேண்டும்.

2. ஆட்டிறைச்சி கொத்து கறியை மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு உப்பு தூள் சேர்த்து நன்றாக பிசிறி வைக்கவும்.

3. இப்பொழுது வடைச்சட்டியை அடுப்புல வைத்து மரசெக்கு கடலெண்ணய் 3 தேக்கரண்டி ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. பிறகு அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாய்விழுது , சின்ன வெங்காயம் விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகுஅதில் வரமிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் மற்றும் கொத்து கறி சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அதில் சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் சேர்த்துகோங்க நன்றாக கறி முக்கால் பாகம் வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

7. முக்கால் பாகம் வெந்தது என்று உறுதிபடுத்திய பின்னர் அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

8. இப்பொழுது இந்த கலவை கொஞ்சம் கொச்சு போல் இருக்க வேண்டும்.

9. அதில் பொடியாக பொடித்து வைத்துள்ள பொட்டுகடலை மாவு, மசித்த சாப்பாடு மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி பிசைய வேண்டும் கை பொறுக்கும் சூட்டில்.

10. அதில் நாட்டுக்கோழி முட்டை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்து அதன் பசவுடன் உருண்டைகளை உருட்டி கொள்ள வேண்டும்.

11. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து சுடச்சுட சுவையான ஆட்டிறைச்சி கோலா உருண்டைகளை பரிமாறவும்.

Loading...
Categories: அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors