ஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது!, Goat milk is good for the baby health tips in tamil

குழந்தைகள் நலத்திற்கு ஆட்டுப்பால் ஆரோக்கியமானது என ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது!

ஆஸ்திரேலியா நாட்டின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்துள்ளனர். இந்த ஆய்வில் ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 வகையான சத்துக்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

அதேவேளையில் ஆட்டுப்பால் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது எனவும், இரைப்பை குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் குடலில் ஏற்படும் தொற்றுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்த ஆட்டுப்பால் உதவுகிறது.

சந்தேகமில்லாமல் தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்திலும் அல்லது குறைவாக தாய்ப்பால் சுரப்பதாலும் அதற்கு மாற்றாக பசும்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் ஆட்டுப்பாலில் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க பரிசீலிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேராசிரியர் ஹர் சரண் கிங் தெரிவிக்கையில்.,

மேலும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு அளிக்கும் பலன்கள் குறித்து உறுதி செய்ய எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil, குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors