ஆப்பிள் பேரீச்சம்பழ கீர், Apple pereechchampala keer recipe in tamil

ஆப்பிள் பேரீச்சம் பழ கீர் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள். சத்து நிறைந்த ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்
தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு கப்
கொழுப்பு நீக்கிய பால் – ஒரு கப்
சோளமாவு – 2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் – கால் கப் பொடியாக நறுக்கியது
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி
வால்நட் – சிறிதளவு

செய்முறை:

* ஒரு வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும்.

* மற்றொரு பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும்.

* வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். கட்டிகள் ஏற்படாமல் நன்றாகக் கிளறவேண்டும்.

* அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும் சுவையும் பாலில் கலந்துவிடும். மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறி இறக்கி விடவும்.

* பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வால்நட் துகள்களைத் தூவவும்

இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors