ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் செய்முறை குறிப்பு, for long life vaalaippoo poriyal recipe in tamil, tamil samayal kurippu

வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!

ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி!
ஹைலைட்ஸ்

  • வாழைப்பூவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன
  • மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவில் பொறியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவில் பொறியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை:

வாழைப்பூ – 2,
மோர் – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
துவரம் பருப்பு – 50 கிராம்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, மோர் கலந்த தண்ணீரில் ஊற கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த்துறுவல் வேக வைத்த பருப்பு, உப்புத்தூள் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.
Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors