ஆரஞ்சு பழத்தோல் எளிய அழகு குறிப்புகள் .., orange beauty tips in tamil, tamil alaku kurippukal

கண்களுக்கு

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

கண்களைச் சுற்றி

சிலருக்கு கண்களுக்குக் கீழ் இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத்திட்டாக இருக்கும் அதற்கு, வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருமை மறைந்து முகம் பளபளப்பாகும்.

தலைமுடிக்கு

உலர்ந்த ஆரஞ்சு தோல் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பிஞ்சு கடுக்காய் 10 கிராம், வால் மிளகு 10 கிராம், பச்சை பயறு கால் கிலோ எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாக தேய்த்துக் குளித்தால் தலையில் அரிப்பு இருந்தால் அது நீங்கும். உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், பூலான்கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.

முகத்திற்கு

ஆரஞ்சு பழச்சாறு தினமும் முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகம் கழுவ முகம் பளிச்சென இருக்கும்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், சந்தனப்பவுடர் – 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன் பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டிப்பார்க்காது.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்கு பேக்போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒருமுறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போன்று முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜுஸையும் பயன்படுத்தலாம்.

கழுத்துக்கு

கழுத்தில் கருமை நிறம் அல்லது தழும்பு இருந்தால் அதைப் போக்க ஆரஞ்சு உதவும். ஆரஞ்சுத் தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை ஆகியவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளவும். தினமும் இரவு உறங்கும் முன், கருமையான பகுதிகளில் அல்லது தழும்பில் நன்றாக அதனை மூடுவது போல் பூசுவும். காய்ந்ததும் நீரால் கழுவி விடுங்கள். தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors