இடியப்பத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்…, idiyappam chicken briyani recipe in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள் :சிக்கன் – 300 கிராம்
இடியாப்பம் – 3 கப்
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
பிரிஞ்சி இலை – ஒன்று
வெங்காயம் – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
தக்காளி – ஒன்று
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
தண்ணீர் – அரை டம்ளர்
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை :வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கலந்த பின்னர் சிக்கன், தண்ணீர் அரை கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைக்கவும் பிறகு பரிமாறவும்.

சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors