இதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா செய்முறை, thinai upma for healthy heart recipe in tamil, tamil cooking tips

சுவையான தினை அரிசி உப்புமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

இதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா ரெசிபி!
  • திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்
  • இதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது. திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சுவையான தினை அரிசி உப்புமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை:

தினை அரிசி – ஒரு கப்,
வெங்காயம், கேரட், குடமிளகாய் – தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.

நன்றாக கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து , திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தினை அரிசி உப்புமா தயார்!

 

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Udal aarokkiyam tips in tamil

Leave a Reply


Sponsors