இனிப்பான இஞ்சி மிட்டாய் செய்முறை, Inippana ginger middaai seimurai in Tamil, Tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • இளசான இஞ்சி – 200 கிராம்
  • சுத்தமான பாகு வெல்லம் – 300 கிராம்
  • கோதுமை மாவு – ஒரு மேசைக்கரண்டி
  • ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
  • நெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

இஞ்சியைத் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் காய்ச்சுங்கள்.

இளம் பாகு பதம் வந்ததும் இஞ்சி விழுது சேர்த்து, சிறிது நேரம் கிளறுங்கள்.

கோதுமை மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள்.

நெய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள்.

இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் தயார்.

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors