இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!, RAAL Macaroni, Samayal kurippu, in tamil, tamil tips

தேவையானவை:

  • இரால் – 10(வரட்டியது)
  • மக்ரோனி – 3 கப்
  • பீன்ஸ்- 5
  • உருளைகிழங்கு – 2 சுமாரானது
  • வெங்காயம் – பாதி பெரியது
  • தக்காளி – 2 சிறியது
  • இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
  • பூண்டுவிழுது – 1 தேக்கரண்டி
  • கருவா – ஒரு துண்டு
  • ஏலம் – 2
  • புதினா இலை – சிறிது
  • கருவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி இலை – சிறிது
  • பச்சைமிளகாய் – 3
  • மஞ்சள்தூள்- சிறிது
  • மிளகுதூள் – 1 தேக்கரண்டி
  • சோம்புதூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தாளிப்புக்கு
  • தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

  • முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
  • சிறிது வெங்காயம்,தக்காளியை தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
  • உருளைகிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • பீன்ஸை நீளதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • ஒரு சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மக்ரோனியை போட்டு சிறிது உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம் போட்டு தாளித்து பின் வெங்காயம்,கருவேப்பிலை,தக்காளி போட்டு வதக்கவும்.
  • பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கி,தயிர்,புதினா இலையை சேர்க்கவும்.
  • பின் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,பீன்ஸ்,உருளைகிழங்கு சேர்த்துகிளறி,மஞ்சள்தூள்,மிளகுதூள்,சோம்புதூள்,உப்பு, சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • காய்கறிவெந்ததும் வரட்டிய இரால், தேங்காய்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • சிறிது நேரம் கழித்து இரால் காய்கறி உடன் சேர்ந்ததும் வேகவைத்த மக்ரோனியை சேர்த்து கிளறவும் தீயை மிதமானதாக வைக்கவும்.
  • எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்
Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors