இவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க… யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க…, tasty payasam recipe in tamil

ரவை – 3/4 கப்

ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்.

நெய் – 1-2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

முந்திரி பருப்பு (உடைத்தது) – 8-10 உலர்ந்த

திராட்சை பழங்கள் – 10-12

பால் – 1/2 பெளல்

தண்ணீர் – 4-5 கப்

ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள்.

2 நிமிடங்கள் கடாய் சூடானதும் நெய்யை ஊற்றவும் நெய் உருகும் வரை காத்திருக்க வேண்டும். நெய் நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும் வறுத்ததை எடுத்து ஒரு பெளலில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது அதே கடாயில் ரவையை பொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதில் பால் சேர்த்து கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.

இப்பொழுது சர்க்கரையை சேர்த்து சர்க்கரை முழுமையாக கரையும் வரை காத்திருக்கவும் இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

சில நிமிடங்கள் அப்படியே அடுப்பில் வைத்து இருக்கவும் பிறகு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள் சூடாக அல்லது ஆறிய பிறகு பரிமாறவும்.

சுவையான ரவா கீர் ரெடி

 

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors