உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா? தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ!.., high pressure food tips in tamil,

மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் இருபாலினதவரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு, பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தம் கொள்கிறவர்களும், பய தாக்குதலில் அகப்படுபவர்களும், பதட்டத்திற்கு ஆட்படுகிறவர்களும் இந்த நோய்க்கு இரையாகின்றனர். இரத்த கொதிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், கவனம் மிகவும் அவசியம்.

ஹைபர் டென்ஷன் என்னும் இந்த நோய், பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. மாரடைப்பு, வாதம் போன்றவை வருவதற்கான அறிகுறியாக உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. ஆகவே இரத்த அழுத்தத்தை சரியான விகிததில் வைத்து கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடும், மருந்துகளும் முக்கியம். இன்றைய உணவுகளில் பல, இந்த நோயை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் , இரத்த கொதிப்பு உள்ளவர்கள் கட்டாயமாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றை பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

உப்பு: இரத்த கொதிப்பு உள்ளவர்கள், உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது, உப்பில் உள்ள சோடியம் , உடலின், சிறுநீரகம், இதயம்., தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது. இரத்த அழுத்தம் உயரும் போது, தமனிகளில் அழுத்தம் அதிகமாகி, அவற்றை குறுக்கி விடுகிறது அல்லது, வெடிக்க செய்கிறது. சில நேரங்களில் அதிக அளவு சோடியம் உட்கொள்ளல் , இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள், அதிகமான சோடியம் உட்கொள்ளளால் பாதிப்படைகிறது. தொடக்கத்தில், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரி 2.5மிகி அளவு உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பை மட்டும் தனியாக உட்கொள்ளுவது அல்லது உப்பு அதிகம் உள்ள உஅனவை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இரத்த அழுத்தத்தின் அளவை உயர்த்தும்.

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்: கேன் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் , சூப் , பீன்ஸ் ஆகியவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. இவை நீண்ட நாள் கெடாமல் இருக்க இத்தகைய அதிகளவு உப்பு தேவைப்படுகிறது . ஒரு வேளை , கேன் உணவுகளை உட்கொள்ள வேண்டி இருக்கும் போது, அந்த உணவை, கொத்துமல்லி கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து பின்பு எடுத்து உண்ணலாம். இதனால், அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவு குறையும். கேனில் பதபடுத்தபட்ட சாஸ், கெட்சப் போன்றவற்றிலும் அதிக உப்பு சேர்க்கபட்டுள்ளது. நீண்ட நாட்கள் அவற்றை பாதுக்கக்க இத்தகைய நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. ஆகவே இவற்றை வாங்கி பயன்படுத்துவதை விட சாஸ் போன்றவற்றை வீட்டில் தயாரித்து உண்ணலாம். இதானல் நமக்கு தேவையான அல்லது சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ளலாம் . சூப், நூடுல்ஸ் போன்றவற்றிலும் உப்பு அதிகம் சேர்க்கபடுகிறது. வேக வைப்பதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க இந்த பொருட்களில் உப்பு அதிகம் பயன்படுத்தபடுகிறது. ஆகவே, சூப், நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கும்போது, குறைந்த சோடியம் உள்ளவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றோடு, வீட்டில் இருக்கும் பச்சை காய்கறிகளை வேக வைத்து , சேர்த்து உண்ணலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவு: குளிர்பதனம் செய்யப்பட்ட சிக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், இறால், சிக்கன் சாசேஜ் , நுக்கட், பிரெஞ்சு ப்ரை போன்றவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, சோடியம் அதிகமாக சேர்க்கபடுகிறது. இதனால் இவற்றின் சுவை கூடுகிறது. தயாரிக்கும் நேரம் குறைகிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட , மற்றும் குளிரூட்டபட்ட ப்ரோசன் உணவுகள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகவே, தினசரி புதிய காய்கறிகள் மற்றும் பொருட்களை மார்க்கெட்டிற்கு சென்று வாங்கி பயன்படுத்துவது நல்லது.

இனிப்பு உணவுகள்: இன்றைய சந்தைகளில், நிறைய இனிப்பு உணவுகள் கிடைக்கின்றன. அதில் சேர்க்கபட்டுள்ள இனிப்பு, இயற்கை இனிப்பாகவும் இருக்கலாம் அல்லது செயற்கை இனிப்பாகவும் இருக்கலாம். அதிக அளவு இனிப்பு உட்கொள்ளல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். மேலும், இவற்றில் கலோரி அளவும் அதிகம். நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் , இத்தகைய பழக்கம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கும், அதிக எடை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே, நேரடியாக உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கலாம். அல்லது சாக்லேட் , பிரட், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, போன்றவற்றை உண்ணுவதை தவிர்க்கலாம் . சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும் உணவுகளை அறிந்து அவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும், இனிப்பு உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

குளிர்பானங்கள் : நம்மில் பலரும் குளிர்பானகளுக்கு அடிமையாகவே இருக்கிறோம். அதன் சுவை மற்றும் தாகத்தை தணிக்கும் தன்மை அவற்றிற்கான தேடலை அதிகரிக்கிறது. அசிடிட்டியை குறைக்க உதவும், இத்தகைய குளிர்பானங்களில் கார்போனேடட் சோடா என்ற ஒரு ரசாயனம் சேர்க்கபடுகிறது. மேலும் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவற்றில் இருக்கும் இனிப்புத்தன்மை, சாக்லெட்டில் இருப்பதை விட அதிகமானது. தொடர்ந்து குளிர்பானங்கள் பருகுவதால், எடை அதிகரிக்கிறது, மேலும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. ஆகவே, குளிர்பானங்களை குறைத்து புதிதாக பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

மாவு பண்டங்கள் : குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எப்போதுமே கேக், குக்கி போன்ற மாவு பண்டங்களில் ஈடுபாடு அதிகம். இதன் நாவுறும் சுவைக்கு அனைவரும் அடிமையாவர் . என்ன தான் அதி அற்புத சுவை இருந்தாலும், இந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பல்வேறு கெடுதல்களை செய்கின்றன. ஏனென்றால், இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது ஒரு முக்கிய காரணம். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் ஏற்படும்போது, உடலின் அழகு வடிவம் இழக்கப்படுவதுடன், உடல் சார்ந்த பல நோய்கள் உண்டாகிறது, இரத்த அழுத்த அளவும் அதிகரிக்கிறது. ஆகவே இத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மதுபானம்: இன்றைய நாகரீக உலகில், பல இளைஞர்களும், பெரு நிறுவன ஊழியர்களும், மது அருந்துவதை ஒரு ஸ்டைல் என்ற நிலையில் பார்க்கின்றனர். மதுபானங்களில், சர்க்கரை அளவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் உண்டாகிறது . மது அருந்துவதால் சிறுநீரக கோளாறு, இதய நோய், போன்றவை உண்டாகிறது, மேலும் உடல் பருமன் ஏற்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, இரத்த கொதிப்பிற்கு காரணமாகின்றன. இதனால் மொத்த உடலும் பாதிப்படைகிறது.

புகையிலை புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.”இந்த வாசகத்தை அனைவரும் அறிவோம். புகைலை, என்பது, புற்றுநோய், நுரையீரல் கோளாறு, ஆரோக்கிய கெடுதல் ஆகியவற்றிகு முக்கிய காரணம். மேலும், புகையிலை மெல்லுதல் அல்லது புகை பிடித்தல், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகமான் புகையிலை உட்கொள்ளளால், தமணிகளின் சுவர்கள் குறுகலாகின்றன. புகையிலையை நேரடியாக உட்கொள்வது அல்லது புகை பிடிப்பது , ஆகிய இரண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே இந்த பழக்கத்தை முற்றிலும் கை விடுவது நல்லது.

காபின் : மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் , காலையில் எழுந்தவுடன் மிதமான சூட்டில் பருகும் காபி , காலை வேளை`யை சுறுசுறுப்பாக்கும் ஒரு மந்திர மொழி. ஆனால் , அதுவே காபி உட்கொள்ளல் அல்லது காபின் பொருட்களை அதிகம் உட்கொள்வது இரத்த கொதிப்பை அதிகப்படுத்தும். ஆகவே காபின் உணவுகளை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

ஊறுகாய்: ஊறுகாய் பிடிக்காதவர்கள் மிகவும் சிலரே. இந்தியாவில், ஊறுகாயை ஒரு வேளையாவது தங்கள் உணவில் இணைத்துக் கொள்வர். தென்னிந்தியர்கள், சாதத்துடனும், வட இந்தியர்கள், சப்பாத்தி அல்லது பராத்தாவுடன் ஊறுகாயை சேர்த்து சாப்பிடுவர். ஊறுகாய் சாப்பிடுவதற்கு சுவையானதாக இருந்தாலும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தும் சோடியம், இரத்த கொதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே, சோடியம் அல்லது இனிப்பு குறைவாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஊறுகாய்களை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அவற்றை தயாரிக்கலாம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் , அவர்கள் உண்ணும் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மேலும் பல உடல் உபாதைகளை உண்டாக்கும். ஆகவே மேலே குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமாக வாழலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors