உங்கள் தோல் உரிகிறதா? உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை, skin health tips in tamil

அனைவருக்குமே சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இப்போதிருக்கும் சுற்றுசூழல் பாதிப்புகளால் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சரும பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சினை தோல் உரிவது ஆகும். பொதுவாக இவ்வாறு தோல் உரிந்தால் அவர்கள் வளர்க்கிறார்கள் என்பது மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கையாகும்.

உண்மையில் உங்கள் உடலில் தோல் உரிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம் இவ்வாறு தோல் உரிவது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் உங்களுக்கு தோல் உரிவது ஏதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

வறட்சியான சருமம் தோல் உரிவு ஏற்படுவதற்கு பொதுவான முக்கிய காரணம் வறட்சியான சருமம் ஆகும். நீங்கள் இயற்கையாகவே வறண்ட சருமத்தை கொண்டவராக இருக்கலாம், குளிர், வானிலை மாற்றங்கள் போன்றவை வெளிப்புற காரணங்களாக இருக்கும். மென்மையான ஈர்ப்பதமூட்டிகள் மூலம் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும். powered by Rubicon Project

சூரிய வெப்பம் கடுமையான வெப்பம் உங்கள் சருமத்தின் மேல் அடுக்கை சிதைக்கக்கூடும். அதனால்தான் வெயில்காலம் தொடங்கிய சில நாட்களில் உங்கள் சருமம் உரிய தொடங்குகிறது. எனவே சூரிய வெப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும் க்ரீம்களை பயன்படுத்துங்கள், மேலும் சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளியே சுற்றாதீர்கள்.

ஒவ்வாமை எதிர்வினைகள் தோல் உரிவதற்கு மற்றொரு முக்கிய காரணம் சரும ஒவ்வாமை ஆகும். இதற்கு காரணம் உங்களின் மேக்கப் சாதனங்கள், நீங்கள் உபயோகிக்கும் சோப் என எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். இதனால் உங்களுக்கு சிறிது எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படலாம் இறுதியில் இதனால் தோல் உரியத் தொடங்கும்.

பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்று இந்த நோய்த்தொற்றுகள் எளிதில் பரவக்கூடியவை. ஏனெனில் இவை அனைத்து வகையான காலநிலைகளிலும் பரவக்கூடியவை. பலரும் உபயோகிக்கும் பொது இடங்களில் இருந்தே இவை எளிதாக பரவுகிறது. இந்த பூஞ்சை தொற்றுக்கு பொதுவான பெயர் ரிங்வார்ம் ஆகும். இது சருமத்தில் வட்ட வடிவத்தில் நமைச்சலாக ஆரம்பிக்கும், தொடக்க நிலையிலேயே கவனிக்காமல் விட்டால் இது தொடர்ந்து தோல் உரிவதற்கு காரணமாக மாறிவிடும்.

புற்றுநோய் சிகிச்சை புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட பலர் அதற்கு பின் சில பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த பாதிப்புகளில் ஒன்றுதான் தோல் உரிவது ஆகும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும்.

எக்ஸிமா பொதுவாக முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற உடலின் மடிப்புகளில் சிவந்த சருமம், நமைச்சல், அரிப்பு, தோல் உரிவது போன்றவை ஏற்படும். எனவே தோல் உரிந்தால் அதனை அலட்சியமாக விடாமல் உடனடியாக சரும மருத்துவரை அணுகுவது நல்லது

சொரியாசிஸ் சொரியாசிஸ் கூட உங்கள் சருமம் தடிமனாக மாறவும், தோல் உரியவும் காரணமாக அமைகிறது. இது உடல் முழுவதும் சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற பிற ஆரோக்கிய பிரச்சினைகளுடன் தொடர்புடையது.

கைகளை அதிகமாக கழுவுவது வெறுமனே உங்கள் கைகளை நீரில் அதிக நேரம் வைத்திருப்பது, அல்லது அதிகப்படியான கை கழுவுதல், கைகளில் தோல் உரிக்கப்படுவதற்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம். சோப்பு அல்லது அழகுசாதனப் பொருட்கள் போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளும் ஒரு விளைவை ஏற்படுத்தும்.

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors