உடனடி சிற்றுண்டியாக உப்புமா செய்யும் எளிய முறை, easy uppuma recipe in tamil

உப்புமா அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு டிபன் வகை. தோசை , இட்லி என்று தொடர்ந்து ஒரே மாதிரியான டிபன் வகைகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா வாருங்கள் இந்த சுவையான உப்புமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

உப்புமா செய்ய தேவையான பொருட்கள் : –

ரவை – 1 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

கருவேப்பிலை – சிறிதளவு

கடுகு – 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்புமா செய்முறை :

முதலில் ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை கொட்டி நன்றாக பொரியும் வரை கிண்டவும்.

பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .

பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு நன்றாக கொதித்ததும் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும்.

10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors