உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!, Healthy Herbal Tea for healthy Body in tamil health tips

தேவையானப்பொருட்கள்:

கிராம்பு, ஏலக்காய் – தலா 2,
தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன்,
சீரகம், சுக்குப்பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (அல்லது) வெல்லம் – 5 கிராம்.


செய்முறை:

இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்கவும்.

டீ போடும்போது, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு, அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடிவிடவும். ஐந்து நிமிஷங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

குறிப்பு:

டீயில் வேறு ஃப்ளேவர் வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம். அல்லது கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடலாம்.

பலன்கள்:

ஹெர்பல் டீ தும்மல், தடுமனைக் குறைக்கும்.
கபத்தைக் குறைக்கும்.
குளிர்காலத்தில் இருக்கும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors