உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப், mullanki soup Radish souphealth tips in tamil, tamil samayal kurippu

முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்
தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிது

செய்முறை :

* முள்ளங்கி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் முள்ளங்கி, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொள்ளவும்.

* அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

* கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சத்தான முள்ளங்கி சூப் ரெடி.

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors