உடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி!, kariveppilai kulambu recipe in Tamil, Tamil healthy samayal tips

மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையில் சுவையான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

உடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி!
ஹைலைட்ஸ்

  • கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவை
  • சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்க்கலாம்
கறிவேப்பிலையில், இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன.

மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. இதில் நிறைந்திருக்கும் பீட்டாகரோட்டின் பார்வைத்திறனை மேம்பட வைக்கும். கறிவேப்பிலையில் அதிகளவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவை. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையில் சுவையான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகு – 10,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
எண்ணெய் – 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர்மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
இதனுடன் புளி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இது சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசக்கு கூட சிறந்த சைட்டீஷாக இருக்கும்.

(குறிப்பு: கறிவேப்பிலை ஆன்டி-கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.)

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors