உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?, for lose weight tips in tamil

  • உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். இருப்பினும் இன்று வரை பலர் அதனை தூக்கி எறிந்து கொண்டு தான் உள்ளார்கள்.

 

  • கறிவேப்பிலையைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்னவெனில் கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் என்பது தான். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள்.

  • கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் தான், உணவுகள் செரிமானமாகாமல் அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து, தொப்பையை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் வந்தால், காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

 

  • பொதுவாக கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிட்டால், உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

 

  • பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வாருங்கள்.

 

  • ஆய்வுகளிலும் கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைவது தெரிய வந்துள்ளது. அதுவும் அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறதாம்

 

  • தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

 

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors