உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…, Eat Fruits in health tips in tamil

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு உண்டபின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும்பழக்கம் இருக்கும். அது ஏனென்று கேட்டால் உணவுக்குப் பின் பழம் சாப்பிடுவது மலச்சிக்லைத் தவிர்க்கும் என்று நம்புகிறோம்.

ஆனால் உண்மையிலேயே உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?… அப்படி சாப்பிடலாமா என்றால் மருத்துவ நிபுணர்கள் நோ என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணங்களாவன,

சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

அதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். வயிறு உப்பியது போல் இருக்கும்.

அதனால் எப்போதுமே சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors