உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை, potato ommelate recipe in tamil, tamil samayal kurippu

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

முட்டை – 3
உருளைகிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை – சிறிதளவு
மிளகு பொடி – ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லம் ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்.

* ஒரு நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.

அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

* இப்பொழுது பொன்னிற உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

குறிப்பு :

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி மசாலா சேர்த்து எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors